புது வீடு வாங்கியுள்ள நடிகர் விஜய் சேதுபதி! அதுவும் எங்கு தெரியுமா?



Vijay sethupathi new house in chennai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் விஜய் சேதுபதி. எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது திறமையாலும், உழைப்பாலும் தமிழ் சினிமாவில் வளர்ந்த நடிகர்களில் இவரும் ஒருவர். துணை நடிகராக இருந்த இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் படம் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.

தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடித்த சங்கத்தமிழன் படம் வெளியாகி வியாபார ரீதியாக மாபெரும் வெற்றிபெறாவிட்டாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

vijay sethupathi

இந்நிலையில் சென்னை சேத்பெட்டில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம் விஜய் சேதுபதி. பொதுவாக ரசிகர்கள் தொல்லை இருக்கும் என்பதால் நடிகர்கள் சிட்டிக்கு வெளியே வீடு வாங்குவதுதான் வழக்கம்.

ஆனால், தனது ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் எளிதில் இணைந்து கொள்வது சிட்டிக்குள் இருந்தால் தான் முடியும் அதனால்தான் சிட்டிக்குள் வீடு வாங்கியுளேன் என கூறியுள்ளார் விஜய் சேதுபதி.