மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய்யின் மகன் படத்தில் குவியும் வாரிசு நட்சத்திரங்கள்? லேட்டஸ்ட் அப்டேட்!
விஜய்யின் மகன்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது இவருடைய மகன் சஞ்சய் தன்னுடைய தந்தையை போலவே சினிமாவில் அறிமுகமாக உள்ளார். ஆனால் தளபதி விஜய் போல் நடிகராக இல்லாமல், இயக்குனராக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனராகும் விஜய் மகன்
வெளிநாட்டில் சினிமா துறை சார்ந்த படிப்பை முடித்துள்ள சஞ்சய் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை எந்தவித அப்டேட்டும் இல்லை.
இதையும் படிங்க: வெங்கட் பிரபுவை பாராட்டிய விஜய்.. குஷியில் GOAT படக்குழு!
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் பூஜை சென்னையில் ரகசியமாக ரகசியமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பூஜையில் விஜய் கூட கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து படத்திற்கான நடிகர்கள் மற்றும் நடிகைகளை படக்குழுவினர் தேர்வு செய்து வந்துள்ளனர்.
வாரிசு நட்சத்திரங்கள்
இந்த நிலையில் விஜயின் மகன் சஞ்சய் இயக்கும் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முன்னணி கதாபாத்திரத்திலும், அவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமானின் மகன் ஏ ஆர் ஆர் அமீன் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்களின் வாரிசுகள் ஒரே திரைப்படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: அரசியலில் விஜய்.! என் ஆதரவு எப்போதும் உண்டு.! பிரபல நடிகை மகிழ்ச்சி.!