வெங்கட் பிரபுவை பாராட்டிய விஜய்.. குஷியில் GOAT படக்குழு!



Vijay wishes Venkat Prabhu in GOAT movie

GOAT திரைப்படம் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். இந்த படத்தின் படிப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் மாதம் திரையரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

venkat prabhu

இதனையடுத்து இந்தப் படத்தின் எடிட்டிங் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தின் பின்னணி இசை காண வேலையை யுவன் சங்கர் ராஜா தொடங்கியுள்ளதாக சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். 

இதையும் படிங்க: கடைசியா இது நடந்திருச்சு.! அர்பைஜானில் பிரபலத்துடன் நடந்த சந்திப்பு.! இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்த மாஸ் புகைப்படம்!!

வெங்கட் பிரபுவை பாராட்டிய விஜய் 

இந்த நிலையில் தளபதி விஜய் GOAT திரைப்படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு படம் பயங்கரமாக இருப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியது. மேலும், இந்த படத்தின் மீது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது வைத்துள்ளதால் முதல் பாதி அளவிற்கு இரண்டாவது பாதியும் நன்றாக வர வேண்டும் என கூறியுள்ளாராம். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

venkat prabhu

GOAT படத்தின் அடுத்த அப்டேட் 

இதுவரை GOAT படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் மூன்றாவது பாடல் வெளியாக உள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெங்கட் பிரபுவுக்கு செக் மேட் வைத்த சிவகார்த்திகேயன்.!! கோட் ரிலீஸ்-க்கு பிறகு கூட்டணி உறுதியாகுமா.?