புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஒரே ஜாலிதான்.. திருமண தேதியை உறுதி செய்தாரா விஜய் டிவி புகழ்?.. அசத்தலான அறிவிப்பால் குவியும் வாழ்த்துக்கள்..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் புகழ். இவர் குக் வித் கோமாளி சீசன் 2-ன் முடிவில் 8 படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
மேலும் அஜித், சூர்யா, சந்தானம் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். அடுத்ததாக இவரது நடிப்பில் "zoo keeper" என்ற படமும் வெளியாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னதாக தங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக போட்டோஷூட்நடத்தி கேப்ஷனில் புகழ் கூறியிருந்தார்.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி புகழ் மற்றும் பென்சியா காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவராத நிலையில் புகைப்படம் வெளியாகியுள்ளது.