மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இயக்குனர் வினோத்துக்கு பச்சைக்கொடி காட்டிய கமல்.. வெளியான அசத்தல் தகவல்!
இயக்குனர் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள திரைப்படம் குறித்த அசத்தல் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வினோத். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உருவெடுத்துள்ளார். இதனையடுத்து இயக்குனர் வினோத் கமல்ஹாசனின் 234 வது திரைப்படத்தை இயக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.
ஆனால், அதன் பின்னர் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாததாலும், கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால், இந்த திரைப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பது உறுதி என அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.