#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நான் புடவை கட்டியதே இதனால்தான்.. மனம்திறந்து ரகசியத்தை போட்டுடைத்த அஜித்தின் ரீல் மகள்!
oதமிழில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். அந்த திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இவர் இதற்கு முன் 10க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இதையடுத்து அனிகா கடந்த ஆண்டு இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவருக்கும் அஜித்திற்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அதனைத்தொடர்ந்து அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து அனிகா தற்போது ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகிவரும் குயின் என்ற வெப் சீரிஸில் சிறு வயது ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். மேலும் அதற்காக அவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அனிகா புடவையணிந்து வெளியான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து அனிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், முதல் முதலாக புடவை அணிந்த தருணம் குறித்து பேசியுள்ளார். அப்பொழுது அவர் குயின் சீரிஸில்தான் நான் முதன்முதலாக புடவை கட்டினேன். ஆரம்பத்தில் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மற்ற உடைகளை போல வசதியாக இல்லை. பின்பு, திரையில் புடவையில் என்னைப் பார்த்த பிறகு எனக்கே ரொம்ப அழகாகத் தோன்றியது. அதனால் இப்போதெல்லாம் புடவை உடுத்த தொடங்கிவிட்டேன். மேலும் எல்லோரும் நன்றாக இருக்கிறது என கூறுகின்றனர் என அனிகா கூறியுள்ளார்.