#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சிக்கு மதுமிதா வராததற்கு இதுதான் காரணமா? ஆதாரத்துடன் வெளியான உண்மை.
105 நாட்களாக நடந்துவந்த பிக்பாஸ் சீசன் மூன்று சில நாட்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த போட்டியில் பாடகர் முகேன் ராவ் வெற்றிபெற்றார்.
இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட மதுமிதா இறுதி நிகழ்ச்சிக்கு கூட வரவில்லை. இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது தற்கொலைக்கு முயற்சி செய்ததால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன்பின்னர், தனக்கு சம்பள பாக்கியை தருமாறும், இல்லை என்றால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் கூறியதாக விஜய் டிவி சார்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
என்னதான் பிரச்சனையாக இருந்தாலும் இறுதி நிகழ்ச்சிக்கு கூட கலந்துகொள்ளக்கூடாத என சிலர் கேட்டுவந்த நிலையில், தங்களை இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விஜய் தொலைக்காட்சி அழைக்கவில்லை என மதுமிதாவின் கணவர் மோசஸ் நேற்று ஒரு வீடியோயோவில் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவி அழைக்காததால்தான் மதுமிதா இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லையாம்.