மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எதிர்நீச்சல் கன்னிகாவா இது.? நீச்சல் உடையில் வீடியோ... கவர்ச்சியில் வாயடைத்துப் போன ரசிகர்கள்.!
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கனிகா. பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களிலேயே நடித்து வரும் இவர் தமிழில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்த வரலாறு மற்றும் சரணுடன் இவர் இணைந்து நடித்த ஆட்டோகிராப் ஆகிய திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் . இந்த கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கிறார். அப்பாவியான அந்த கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கிறது .
கனிகா எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை. அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என பதிவேற்றி எப்போதுமே தனது சமூக வலைதள பக்கத்தை பிசியாக வைத்திருப்பவர். சமீபத்தில் இவர் பதிவேற்றி இருக்கும் ஒரு வீடியோ ஒன்று ரசிகர்களை ஆச்சரியமடைய செய்திருக்கிறது.
பொதுவாகவே சினிமாவிலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த இவர் சமூக வலைதளத்தில் தனது நீச்சல் உடை வீடியோவை பதிவு செய்து இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் 40 வயதில் இப்படி ஒரு கவர்ச்சி தேவையா என வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.