குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
வெற்றிலையில் இவ்வளவு பயன்களா? இனிமேல் தவறாமல் உபயோகியுங்கள்!!
தமிழர்கள் தங்கள் வீட்டில் நடக்கும் அனைத்து சுப காரியங்களுக்கும் வெற்றிலையை தாம்பூலத்தில் வைப்பது வழக்கம். முந்தைய காலங்களில் உணவு உண்டதற்குப் பின்பு வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என்று வகைகளும் உண்டு.
வெற்றிலை, நமது உடலில் புரதச்சத்தை அதிகரித்து காயங்களை எளிதில் ஆற்றுகிறது. முக்கியமாக தீக்காயங்களை அதிவேகத்தில் குணப்படுத்துகிறது. வெற்றிலை முதுகு வலியை குணப்படுத்துகிறது. அஜீரண தொந்தரவுகளை சரி செய்கிறது. பசியை தூண்டுகிறது. தலைவலிக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. சில வகையான புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது.
ஆஸ்துமா, சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. உடலில் தேவையில்லாத கொழுப்பை கரைக்கிறது. சரும நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கக்கூடிய பண்புகளும் வெற்றிலையில் நிறைந்துள்ளன. அல்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது.
வெற்றிலையில் அயோடின், பொட்டாசியம், வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'பி1' போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் இரவு உணவிற்கு பின் வெற்றிலை போடுவதால் சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தினமும் இதை உட்கொள்வதால் உடம்பில் உள்ள நச்சுத்தன்மை குறைகிறது.
ஒரு பங்கு வெற்றிலை சாறுடன், இரண்டு பங்கு தேன் கலந்து பருகி வர சளி இருமல் குணமாகும். பச்சிளம் குழந்தைகளுக்கு வெற்றிலை வைத்து, சில கை வைத்திய முறைகளை செய்வதை நாம் அறிந்திருப்போம். ஆனால் அவற்றை செய்யும் முன்பு உங்கள் மருத்துவரை அணுகி ஒப்புதல் பெற்ற பின்பே செய்ய வேண்டும். ஏனென்றால், அது சில குழந்தைகளிடம் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
நரை, திரை, மூப்பு ஆகியவற்றிலிருந்து நம்மை காப்பதால் இதனை கற்பக மூலிகை என்றும் கூறலாம். எனவே வெற்றிலையின் பயன்பாட்டை நாம் அதிகரிப்பது நமக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.