மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோடை வெப்பத்தில் கண் வலியால் அவதிப்படுகிறீர்களா.? இதோ உங்களுக்காக எளிய வீட்டு வைத்தியம்.!!
கோடை காலத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அவற்றில் முக்கியமான ஒன்று கண் வலி. அதிக சூப்பின் காரணமாக கண்கள் வறண்டு சிவந்து போகும். கண்களில் எரிச்சல் இருப்பதோடு நீர் வடியும். இந்தப் பிரச்சனைகளை எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம் எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.
கண்கள் சிவந்து போகும் பிரச்சனைக்கு எளிய தீர்வு பாதிக்கப்பட்ட கண்களுக்கு கோல்ட் கம்ப்ரஸ் முறையை பயன்படுத்துவது ஆகும். கோல்ட் கம்ப்ரஸ் என்றால் எந்த வகையிலாவது குளிர்ந்த நீரை கொண்டு கண்களுக்கு ஒத்தடம் கொடுப்பதே. இதற்கு நீங்கள் சுத்தமாக இருக்கும் துவைத்த டவல் அல்லது துண்டை குளிர்ந்த நீரில் நனைத்து, கண்களை மூடி சுமார் 10 - 15 நிமிடங்கள் மெதுவாக ஒத்தடம் கொடுக்கவும். இல்லை என்றால் கண்களை மூடி கண்களுக்கு மேலே ஈர துணியை போட்டு சிறிது நேரம் அப்படியே விட்டுவிடலாம்.
வெள்ளரித் துண்டுகள் : கண்களில் ஏற்படும் எரிச்சல் மற்றும் ரத்த சிவப்பை குறைக்க மற்றொரு பிரபலமான மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியம் வெள்ளரியை பயன்படுத்துவது. வெள்ளரியை எடுத்து மெல்லிய வட்ட வடிவத் துண்டங்களாக்கி கண்களை மூடி, கண்களின் மேல் மெல்லிய வெள்ளரி துண்டுகளை வைத்து சுமார் 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடலாம். இது கண்களில் ஏற்படும் எரிச்சலை குறைப்பதோடு, கண்களுக்கு புத்துணர்ச்சியூட்டும்.
டீ பேக்ஸ்: டீ பேக்ஸ் என்பவை ருசியான டீ-யை குடிப்பதற்கு மட்டுமல்ல கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் சிவப்பையும் குறைக்க உதவும். பிளாக் டீ பேக்ஸை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து விடுங்கள். சில நிமிடங்கள் கழித்து ஆறிய பிறகு கண்களை மூடி கண்களுக்கு மேல் அந்த டீ பேக்ஸை சுமார் 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள்
கண்களுக்கு எக்ஸ்சர்சைஸ் : சோர்வு அல்லது நீண்ட ஸ்கிரீன் டைம் காரணமாக உங்களது கண்கள் பயங்கரமாக சிவந்து போனால், கண்களுக்கு ஓய்வு அளிக்க பிலிங்கிங் எக்ஸர்சைஸ்களை முயற்சிக்கவும். கண்களை சில நொடிகள் வேகமாக சிமிட்டுவது, அதைத் தொடர்ந்து கண்களை திறப்பது மற்றும் பல முறை இந்த பயிற்சியை மீண்டும் செய்வதன் மூலம் கண் வலியால் ஏற்படும் சிவப்பு குறையும்.