Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
அடடே.. கோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவது உடலுக்கு இவ்வளவு நல்லதா?.. தெரிஞ்சுக்கோங்க..!!
ஆண்டுகள் பல கடந்தாலும் பனையிலிருந்து கிடைக்கும் நுங்கு நமக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. துவர்ப்பு சுவையுள்ள தோல் பகுதியில் கால்சியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ், வைட்டமின் பி போன்றவை இருக்கின்றன.
கோடைகாலத்தில் இவை தாகம் தணியவும், உடல் சூடு குறையவும் உதவி செய்கிறது. நமக்கு நீர் கடுப்பு போன்ற பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. கண் எரிச்சல், கண் வலி இருப்பவர்கள் காலையில் நுங்கு சாப்பிட்டு வந்தால் கண் சார்ந்த பிரச்சினைகள் சரியாகும்.
அதே போல அதீத பசி போன்ற உணர்வையும் அது கட்டுப்படுத்துகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் குறைக்க உதவி செய்கிறது. கடினமான உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் நுங்கை கட்டாயம் சாப்பிடலாம்.