அன்றாடம் ஏசி பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி.! இவ்வளவு ஆபத்துகளா.?! 



disadvantages of using ac

அன்றாடம் ஏர் கண்டிஷனர் எனப்படும் AC பயன்படுத்துவதால் என்ன நடக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.

நன்மைகள்

குளிர்ந்த, வசதியான சூழல் இருப்பதால், ரிலாக்ஸாக உணர்வதுடன் வெப்பத்திலிருந்து பாதுகாக்கிறது. இது நல்ல தூக்கத்துக்கு உதவுகின்றது. மேலும், குளிர்ந்த சூழல் மன அமைதியை தரும். அலர்ஜி மற்றும் புகை போன்றவை குறைகிறது. ஜன்னல் திறக்க வேண்டிய அவசியம் இல்லாததால் வெளியிலிருந்து மாசு உள்ளே வருவதில்லை.

இதையும் படிங்க: தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.?!

பாதிப்புகள்

AC நீண்ட நேரம் ஓடுவதால் அறையில் ஈரப்பதம் குறைந்து சருமம் வறட்சியடைகிறது. AC அறைகள் அடைபட்ட சூழலில் இருப்பதால் புறக்காற்று உள்ளே வருவதில்லை. இது உள்ளே இருக்கும் காற்றை அசுத்தமாக்குகிறது.

Ac

மின்சாரச் செலவு அதிகரிக்கும் 

தினமும் AC அதிக நேரம் பயன்படுத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கும். அடிக்கடி ஸ்டெபிலைஸர் மாற்ற வேண்டிய தேவை ஏற்படும்.

சிலருக்கு AC காற்றால் இருமல், சளி, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதிக நேரம் AC அறையில் இருந்தால் உடல் இயக்கம் குறைந்துவிடலாம். இதனால், எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

AC பயன்படுத்துவது வசதியாக இருக்கலாம், ஆனால் சரியான முறையில், அளவோடு பயன்படுத்தினால் மட்டுமே உடல் நலம் பாதுகாக்கப்படும்.

இதையும் படிங்க: காதில் சீல் வடிகிறதா? மக்களே கவனம் தேவை.!