திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எச்சரிக்கை... கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவு பொருள்கள்.!! டாக்டர்களின் அறிவுரை.!!
இன்றைய காலகட்டத்தில் மக்களை அச்சுறுத்துவதில் கொலஸ்ட்ரால் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதால் மாரடைப்பு உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நமது மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் உடலில் அதிகரிக்காமல் இருக்க நாம் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பற்றி இங்கே காணலாம்.
தேங்காய் எண்ணெய்
இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகம் கொண்டுள்ளதாக கருதப்பட்டது. எனினும் தேங்காய் எண்ணெயில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் அதில் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் பேக்கரி உணவுப் பொருட்கள்
பேக்கரி உணவுப் பொருள்களிலும், பேக் செய்யப்பட்ட உணவுகளிலும் நிறைவு பெறாத கொழுப்பு அதிகமாக இருக்கிறது. இவை நமது உடலில் மாரடைப்பு மற்றும் உடல் பருமன் போன்ற வியாதிகளுக்கு காரணமாக அமைகிறது. எனவே கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் இனிப்புகள் போன்றவற்றையும் பேக்கரி தயாரிப்புகளான கேக், பப்ஸ், குக்கீஸ் போன்றவற்றையும் தவிர்ப்பது நலம்.
இதையும் படிங்க: அவித்த வேர்க்கடலையால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.!!
செயற்கையாக தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள்
செயற்கையான சுவையூட்டிகள் மற்றும் இனிப்புகளை கொண்டு தயாரிக்கப்படும் சோடாக்கள், எனர்ஜி ட்ரிங்க்கள் போன்றவற்றில் பிரக்டோஸ் என்ற மூலப்பொருள் உள்ளது. இவை நம் ரத்தத்தில் ட்ரைகிளிசரைடுகள் என்று அழைக்கப்படும் ஒருவித கொழுப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. எனவே செயற்கையாக தயாரிக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்ப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.
இதையும் படிங்க: வாவ்... செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் அல்சருக்கு தீர்வு.!! வெளியான புதிய ஆய்வு.!!