வாவ்... செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் அல்சருக்கு தீர்வு.!! வெளியான புதிய ஆய்வு.!!



drink-water-in-copper-vessel-can-cure-ulcer-new-researc

தற்காலங்களில் பெரும்பாலானவர்கள் கண்ணாடி, பிளாஸ்டிக், எவர்சில்வர் மற்றும் பீங்கான் பாத்திரங்களிலும் கோப்பைகளிலும் நீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இவற்றுக்கு பதிலாக செம்பு உலோகம் கொண்டு தயாரிக்கப்பட்ட கோப்பைகளில் நீர் அருந்துவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். செம்பு கோப்பையில் இரவில் பிடித்து வைக்கப்பட்ட நீரை மறுநாள் காலை அருந்துவதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாமிரம்

செம்பில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது. இவை நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. செம்பு கோப்பையில் நீர் அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலுக்கு கிடைக்கிறது. இந்த செம்பு கோப்பையில் தண்ணீர் குடிப்பதால் உடலில் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற தொற்று கிருமிகளுக்கு எதிராக போராடும் சக்தி அதிகரிக்கிறது.

Copper Vessel

அல்சர் வராமல் தடுக்கிறது

செம்பு கோப்பையில் நீர் அருந்துவதன் மூலம் உடல் அமைப்பு சீர்படுத்தப்பட்டு செரிமானம் சீராகிறது. இதன் காரணமாக உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு உடல் எடை அதிகரிப்பதும் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் செம்பில் உள்ள தாதுக்கள் நீரின் வழியாக உள் சென்று குடலில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது. இதனால் அல்சர் நோய் வராமல் உடலை பாதுகாக்க உதவுகிறது.

இதையும் படிங்க: அடடே... கீமோதெரபி முதல் இதய நோய் வரை.!! இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!!

மூளை செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது

தாமிரத்தில் தயாரிக்கப்பட்ட கோப்பைகளில் தண்ணீர் குடிப்பதால் மூளையின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாகிறது. செம்பில் இருக்கக்கூடிய பாஸ்போலிப்பிட்கள் மூளையின் வளர்ச்சி மற்றும் செயல் திறனுக்கு உதவி புரிகின்றன. இவை நரம்பு மண்டலத்தை வலிமையாக வைத்திருப்பது மூளையின் ஆரோக்கியம் மற்றும் செயல் திறனிலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: ஷாக்கிங்... கால்களில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா.? அலட்சியம் வேண்டாம்.!! மருத்துவர்கள் எச்சரிக்கை.!!