கட்டிப்பிடிப்பதால் இவ்வுளவு நன்மைகளா?... அசத்தல் டிப்ஸ் இதோ.!



Hugging Benefits Tamil 

 

கட்டிப்பிடித்தல் என்பது உலகளவில் மிகப்பெரிய விஷயமாக கவனிக்கப்படுகிறது. மேலை நாடுகளில் தங்களின் அன்பை வெளிப்படுத்திக் கொள்ள கட்டிப்பிடித்தல் மற்றும் அதன்போது முத்தமிடுதல் பொதுவான விஷயமாக இருக்கிறது. 

ஒரு காலத்தில் யார் வீட்டிற்கு வந்தாலும் அவரின் கைகளைப் பிடித்து, மரியாதை நிமித்தமாக கட்டிப்பிடித்தலுடன் வரவேற்று பழகிய நாம், பின் நாட்களில் வெளிநாட்டவர் போல இரண்டு கைகளை குலுக்கியும், தள்ளிதள்ளி நின்றும் அதனை மேற்கொள்ள தொடங்கி விட்டோம். ஆனால், மேலைநாட்டிலோ இன்றளவும் கட்டிப்பிடித்தல் என்பது தொடர்ந்து வருகிறது. 

இதையும் படிங்க: கரும்பு சாறை இவர்கள் சாப்பிட்டால் அவ்வளவு தான்.. நினைத்து கூட பார்க்க வேண்டாம்.!

கட்டிப்பிடித்தல் நன்மைகள்

கட்டிப்பிடிப்பதால் ஒரு நபருக்கு உடல் அளவிலும், மனதளவிலும் பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கட்டி பிடிக்க ஆள் இல்லாத சிங்கிள்ஸ் நாங்கள் என்ன செய்வோம் என்று கேட்டால், செல்லப் பிராணிகள் அல்லது தலையணையை கூட கட்டிப் பிடித்து தூங்கலாம் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. 

இதனால் நமது மனநலம் மேம்பட்டு உற்சாகமான உணர்வு ஏற்படும். காதலர்கள் மற்றும் தம்பதிகள் கட்டிப்பிடிப்பது நெருக்கத்திற்கும் வழிவகை செய்யும். சின்னச்சின்ன உற்சாகமான விஷயங்கள் நமது உடலை தொடர்ந்து இயக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கவும் உறுதி செய்யும். நமக்கு பிடித்தவரின் தோளில் சாயந்திருப்பது கூட கட்டிப்பிடி வைத்தியம் என்பதால், அது மன அமைதி நிம்மதி ஆகியவற்றையும் தரும்.

இதையும் படிங்க: கோடையில் அடிக்கடி கீரைகளை சாப்ப்பிடுவதால் என்னாகும் தெரியுமா.?!