அச்சோ.. மெனோபோஸ் நிலையில் ஆண்களுக்கு இவ்வளவு பிரச்சனை வருமா?.. ஆண்களே உஷாரா இருங்க..!



Men menopause problem tamil

மெனோபோஸ் மற்றும் பருவமடைதல் போன்ற வார்த்தைகள் எப்பொழுதும் பெண்ணுடனே தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது. பெண்கள் மெனோபோஸ் நிலையை அடைந்தால் அவர்களது உடலில் அதீத மாற்றங்கள் ஏற்பட்டு உடல் மற்றும் மனதளவில் பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

இந்த நிலை பெண்களுக்கு மட்டுமல்ல. ஆண்களும் மீசை முளைத்து, குரல் மாறி பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் உருவாகி பருவமடைகிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த மாற்றம் படிப்படியாக நிகழ்கிறது. வயதாக ஆக ஆக ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் உற்பத்தி குறைகிறது. இதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து காணலாம்.

விறைப்புத்தன்மை குறைபாடு :

50 முதல் 60 வயது ஆண்கள் விறைப்புத்தன்மை நிலையின்மை பிரச்சனையால் அவதிப்படுவதாக கூறுகின்றனர். இதனால் ஆண்களுக்கு தங்கள் மீதான சுயமரியாதையில் விரிசல் ஏற்படுகிறது.

மலட்டுத்தன்மை :

மெனோபோஸ் அறிகுறிகளால் அவதிப்படும் ஆண்களுக்கு மலட்டுதன்மை பிரச்சனை இருக்கும். 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களை ஒப்பிடுகையில், 30 வயதுடைய ஆண்களின் கருவுறுதல் விகிதம் 20% அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் காண்பிக்கின்றன. சீரற்ற விந்தணு இயக்கம், விந்தணு சுரப்பு குறைதல் அல்லது அடைப்புகள் போன்றவை வயதானவர்களில் ஏற்படுகிறது.

health tips

மார்பில் அசௌகரியம் :

மெனோபாஸ் காலகட்டத்தில் பல ஆண்களுக்கு மார்பு பகுதியில் வீக்கம் ஏற்படுவதால் அசௌகரியத்தை உணர்வதாக ஆய்வுகள் கூறுகின்றது.

உடலுறவின்மீது ஆர்வம் குறைதல் :

40 வயதிலிருந்து டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தி குறைய ஆரம்பிப்பதால் இது தினந்தோறும் குறைந்து 45 வயது நிரம்பும்போது கிட்டத்தட்ட 50 சதவீதம் ஹார்மோன் உற்பத்தியை குறைத்துவிடும். இதனால் உடலுறவு மீதான ஆர்வமும் குறைந்துவிடும். இதனால் தான் 50-60 வயது ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படுகிறது.

குறைந்த எலும்பு தாது அடர்த்தி :

வயதான பெண்களைப் போல ஆண்களும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர். குறைந்த அதிர்ச்சி முறைவு மற்றும் எலும்பு தாது அடர்த்தி இழப்பு போன்றவை ஏற்படுகிறது.