அசைவ உணவுடன் இதை சாப்பிடுறீங்களா? உசுரே போயிரும்.. உஷார் மக்கா.!



Non Vegetarian Food Don't Mesh With These List Foods 


அசைவ வகை உணவுகள் என்பது பலரின் விருப்ப உணவாக இன்று மாறிவிட்டது. வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை, 2 நாட்களுக்கு ஒருமுறை என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மக்கள் அசைவ வகை உணவுகளை சாப்பிடுகின்றனர். கடலோரம் இருக்கும் மக்கள் பெரும்பாலும் தினமும் மீன் வகை உணவுகளை சாப்பிட்டு மகிழ்கின்றனர். 

இவ்வாறான அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, நாம் தவிர்க்க வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன. அதாவது, கீரை வகை உணவுகளை இரவில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதைப்போல, அசைவ உணவுகளை சாப்பிடும்போது தவிர்க்க வேண்டிய சில உணவுகள் இருக்கின்றன. 

health tips

ஆட்டு பிரியாணி, இறைச்சி சாப்பிடுவோர் கவனம்

அதன்படி, பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை பரவுள்ள பிரியாணியை சாப்பிடும் பலரும், தேநீரும் குடிக்கும் வழக்கம் கொண்டுள்ளனர். மட்டன் பிரியாணி சாப்பிட்ட பின்னர் உடன் குடிக்கப்படும் தேநீர் செரிமானத்தை சிக்கலாகும். நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். 

இதையும் படிங்க: வாத பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் பேரிக்காய்; மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!

ஆட்டு இறைச்சியை சாப்பிட்டதும் தேன் சாப்பிட்டால் உடலுக்கு நல்லதல்ல. இது உடலின் வெப்பநிலையை அதிகரிக்க காரணமாக அமைந்து, உடல் உபாதையினை ஏற்படுத்தும். ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி சாப்பிடும் முன் & பின் பால் குடிப்பது செரிமான தொல்லையை வழிவகுக்கும்.

இதையும் படிங்க: பெற்றோர்களே கவனம்.. அறிவை மங்க வைக்கும் தொலைக்காட்சி?.. குழந்தைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்..!!