உங்களது முகத்தோற்றம் எவ்வளவு அழகாக இருந்தாலும் உங்களது பாத பித்த வெடிப்பை சரி செய்ய முடியவில்லையா.? இதை மட்டும் செய்து பாருங்கள்.!
பாதங்களின் ஓரங்கள் பிளவுபடுவதுதான் பித்த வெடிப்பு. இது வலியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இளம்பெண்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தும். பொதுவாக பெண்கள் தங்களது முக தோற்றத்திலேயே அதிகக் கவனம் செலுத்துவார்கள். பெண்கள் தங்கள் முகத்தைப் பராமரிக்கச் செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள்கூட தங்கள் பாதங்களை கவனிக்கச் செலவு செய்வதில்லை.
ஆனால் காலப்போக்கில் அவர்களது முகத்தோற்றம் என்னதான் பொலிவு பெற்றாலும். அவர்களது கால்களில் தோன்றும் பாத பித்தவெடிப்பு பெரிதும் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் அமையும். ஆனால் இவற்றை குணப்படுத்த நாகரீக மெடிசன்கள் எவ்வளவோ உபயோகப்படுத்தினாலும் அவர்களுக்கு இது குறைந்தபாடில்லை.
ஆனால் இவற்றை குணப்படுத்த இயற்கை முறையில் எத்தனையோ வைத்தியங்கள் உள்ளன. இதனைப் பயன்படுத்திப் பாருங்கள் மிக விரைவில் பலன் கிடைக்கும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.
மேலும், இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்பாக கால்களை நன்றாகத் தேய்த்து கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்கினால் மறுநாள் பலன் கிடைக்கும். இதிலும் குணமாக விட்டால், முந்திரிக் கொட்டையை நெருப்பில் காட்டி அதில் வடியும் எண்ணெயை பித்த வெடிப்பின் மீது தேய்த்தால் முற்றிலும் குணமாகும் என கூறுகின்றனர் கிராமத்து சிகிச்சையாளர்கள்.