மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
₹.10,000 நோட்டை பாத்துருக்கிங்களா.?! இதோ அரிய புகைப்படம்.!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு அதன் பின் புதிய 500 1000 ரூபாய் நோட்டுகள் வழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது மேலும் அந்த கட்டத்தில் புதிதாக 2000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் செயல்பாட்டுக்கு வந்தது.
நம் நாட்டில் அதிகபட்ச மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டாக அந்த 2000 ரூபாய் நோட்டு இருந்தது சமீபத்தில் அதுவும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முதன் முதலில் 1938 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் நோட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
1938 இல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பத்தாயிரம் ரூபாய் நோட்டு அதன் பின் 1946 ஆம் ஆண்டு மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 1954இல் மீண்டும் 10 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டு மீண்டும் அந்த பத்தாயிரம் ரூபாய் நோட்டு மதிப்பிழக்கப்பட்டது. இந்த நிலையில் விருதுநகர் பகுதியில் வசித்து வரும் எட்வர்ட் என்ற நபர் இந்த பழைய பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கிறார் அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பெயரில் ஆகி வருகின்றது.