80 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: 20 மணி நேரத்திற்கு மேலாக நீளும் மீட்பு பணி..!



11-years-old-boy-fell-in-to-bore-well-in-chhattisgarh

80 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 11 வயது சிறுவனை மீட்க, மீட்பு பணிகள் அவசரகதியில் நடைபெற்று வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம், ஜாங்கிரி ஷம்பா மாவட்டத்திலுள்ள பிஹரிட் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ராகுல் ஷாகு (11). இந்த சிறுவன் நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் தனது வீட்டிற்கு பின்புறம் விளையாடி கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த தோட்டத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். சிறுவனின் அழுகை சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் அவரை வீட்டை சுற்றி தேடி வந்துள்ளனர்.

இதற்கிடையில் சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் கிணற்றுக்குள் விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 80 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.