தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஈவு இரக்கமின்றி... எட்டு வயது சிறுவன், தாய் உட்பட ஐந்து பேர் எரித்து கொலை... மணிப்பூர் கலவரத்தில் கிளர்ச்சியாளர்கள் வெறிச்செயல்.!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலமாக இரு சமூகத்தினர் இடையே முதல் உருவாகிய மிகப்பெரிய கலவரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் தாய் மற்றும் எட்டு வயது மகன் உட்பட ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஐந்து பேர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் பாரதிக ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில் அவர்கள் மைத்ரேயி என்ற இனத்தை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வந்தனர். இதற்கு குக்கி, நாகா என்ற பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த இரு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு பெரிய கலவரமாக வெடித்தது.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் கலவரத்தில் ஏராளமானவர் உயிரிழந்துள்ளனர். துணை ராணுவப்படையினர் இந்த கலவரத்தை அடக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் கிளர்ச்சியாளர்கள் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்துவதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியும் இந்த கலவரத்தை தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் கலவரத்தின் போது காயமடைந்த எட்டு வயது சிறுவனை மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக அவனது தாய் மற்றும் உறவினர்கள் மூன்று பேர் பாதுகாப்பு படையினர் 10 பேரோடு சேர்ந்து ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர். அவர்கள் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்திய கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் ஓட்டுநரை விரட்டி விட்டு அந்த வாகனத்திற்கு தீ வைத்தனர். இந்தக் கொடூர சம்பவத்தில் எட்டு வயது சிறுவன் அவனது தாய் உட்பட குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேர் என மொத்தம் ஐந்து பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.