53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அதிக செல்லம் கொடுத்து வளர்த்ததால் வந்த வினை...!! தடம் மாறி போன பெண்ணை அடைத்துக் கொன்ற தந்தை..!!
பெங்களூருவில், பெற்ற மகளை தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு திருமணம் நடந்து 8 வருடங்கள் கழித்து ஒரு மகள் பிறந்துள்ளார். எட்டு வருடங்கள் குழந்தை இல்லாமல் பிறந்த குழந்தை என்பதால் பெற்றோர் இருவரும் அந்த குழந்தையை மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்துள்ளனர்.
பெற்றோர் கண்டித்து வளர்க்காமல் அதிக செல்லம் கொடுத்து வளர்த்ததால், தன் இஷ்டப்படி வளர்ந்துள்ளார் ரமேஷின் மகள் ஆஷா. மேலும் யாரையும் மதிக்காமல் எடுத்தெறிந்து பேசி திமிருடனே இருந்துள்ளார். இதை கண்டித்த பெற்றோரை அடித்து துன்புறுத்தி உள்ளார்.
இந்நிலையில், ஆஷா தான் காதலித்து வந்த ஒருவரை சில வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவருடன் வாழப் பிடிக்கவில்லை என்று சொல்லி மீண்டும் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அதன் பிறகு அவரது நடவடிக்கை முழுவதுமாக மாறி உள்ளது. தினமும் இரவில் மது குடித்துவிட்டு நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பெற்றோருடன் சண்டை போடுவது, அவர்களை அடித்து உதைப்பது என்று கொடுமைப்படுத்தி உள்ளார்.
இதை பொறுக்க முடியாத ஆஷாவின் தந்தை, இனி இந்த பெண் உயிருடன் இருப்பது தேவையில்லாத ஒன்று என்று முடிவு செய்து, தூங்கிக் கொண்டிருந்த ஆஷாவை விறகு கட்டியால் அடித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் காவல் துறையை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.