மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேரளாவுக்கு நிதி உதவியை அள்ளிக்கொடுத்த கேப்டன் விஜயகாந்த்!.
கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. பல சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் கேரளாவை மீட்டெடுக்க நிதி உதவி செய்து வருகின்றனர்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ரூ. 1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து நாடு திரும்பியதும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த மாநிலத்துக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்க மத்திய அரசை கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
சினிமாவில் அதிகமான புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அரசியலிலும் அவருக்கென்று ஒரு தனி பெயரை எடுத்தவர் விஜயகாந்த்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, மகன் சண்முகப்பாண்டியனோடு தமிழன் என்று சொல் என்ற திரைபப்படத்தில் நடிப்பதாக இருந்தது. அனால் விஜயகாந்தின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.