8 வருஷ உழைப்பு.. ஒரு போன் கால்; மொத்த பணமும் காலி.! கண்ணீர் விட்டு கதறிய பிக்பாஸ் போட்டியாளர்!
#BigNews: பரவுகிறது ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்.. அலெர்ட் நிலையில் அதிகாரிகள்.. மக்களே உஷார்.!
விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் பரவ தொடங்கிவிட்ட நிலையில், பன்றி காய்ச்சல் என்பதை அறியாதவர் கிடையாது. இந்த காய்ச்சல் சீசனுக்கு ஏற்றார் போல பரவி வரும் நிலையில், அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக மிசோரம் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது திரிபுரா மாநிலத்திலும் அது உறுதியாகியுள்ளது. மிசோரம் - திரிபுரா எல்லைப்பகுதியில் உள்ள பண்ணையில் 300 க்கும் மேற்பட்ட பன்றிகள் வளர்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி 66 பன்றிகள் அடுத்தடுத்து ஒரே நாளில் உயிரிழந்த நிலையில், இந்த விஷயம் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து பன்றிகளை தனிமைப்படுத்தி வைத்தனர். மேலும், அதன் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது, (ஏப்ரல் 18) ஆய்வக முடிவுகளின்படி பன்றிகள் ஆப்ரிக்க பன்றித்தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதனால் அங்கு முன்னதாகவே நோய்த்தொற்று பரவி இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பிற பண்ணைகளுக்கு இது தொடர்பான தகவல் தெரிவித்து அறிவுறுத்தப்பட்டுள்ளன.