3 வாரங்களுக்கு பின்பு சாக்கில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட பிணம் அடையாளம் தெரிந்தது..!



after-3-weeks-the-body-was-found-tied-in-a-sack-and-thr

தேனி மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் (32). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவர் ஒப்பந்ததாரர் ஒருவர் மூலமாக ஈரோட்டுக்கு அழைத்து வரப்பட்டார். ஈரோடு மாவட்டம், மோளகவுண்டன்பாளையம் பகுதியில் வசித்து வரும் பழனிசாமி என்பருடைய வீட்டில் கட்டிட வேலை செய்து வந்தார். அங்கு ஏற்கன்வே கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த சேட்டான் (29) என்ற வாலிபரும் வேலை செய்தார். இதனால் 2 பேரும் நண்பர்களாக பழகியுள்ளனர்.

கடந்த மாதம் 30 ஆம் தேதியன்று, அவர்கள் இருவரும்  மது அருந்திக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதம் காரணமாக ஆத்திரம் அடைந்த சேட்டான், சுதாகரை கொலை செய்துள்ளார். இதன் பின்னர் சுதாகரின் சடலத்தை மூட்டையாக கட்டி சாக்கடையில் வீசி சென்ற தகவல் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.

கொலையாளியான சேட்டானை பிடிக்க ஈரோடு காவல்துறையினர், கேரள மாநிலத்துக்கு விரைந்தனர். அங்கு சென்று நடத்திய விசாரணையில், சேட்டான் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் கேரள மாநில காவல்நிலையங்களில் இருப்பது தெரியவந்தது. மேலும், ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எனவே அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த ஈரோடு காவல்துறையினர்முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு, சுதாகர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம்? அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? உள்பட பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.