மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேரளாவில் வெள்ளம் வடிந்த நிலையில், வீட்டிற்குள் இருக்கும் பாம்புகள்!. பதறிப்போன மக்கள்!.
கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை வெளுத்துவாங்கியதால் கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்தது. அதுமட்டுமின்றி மழை வெள்ளம் சூழ்ந்து ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன.
இவ்வாறு பெருகி ஓடும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதுவரை 350க்கும் மேற்பேட்டோர் இறந்துள்ளனர் என கூறுகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவில் தற்போது வெள்ளம் சற்று குறைந்து வருகிறது,வெள்ளம் வடிந்தவுடன் தங்கள் வீட்டுக்கு சென்ற மக்கள் அங்கு பாம்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கேரளத்தில் வரலாறு காணாத அளவு கனமழை பெய்தததால் வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து தற்போது மழை நின்றுவிட்டதால் நீர் வடியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து முகாம்களில் தங்கியிருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
வீடுகள் முழுவதும் சேறும் சகதியுமாக இருப்பதால், வீடுகளில் உள்ள களிமண்களில் பாம்புகள் காணப்படுகின்றன. மேலும் சில இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரில் நல்லப்பாம்புகள் மிதப்பதாகவும் கூறுகின்றனர்.
இதனால் மக்கள் அதிர்ச்சியில் பயந்துள்ளனர். வீடுகளில் சேர்ந்துள்ள சேற்றை மக்கள் மண்வெட்டி மூலம் சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதோடு, பாம்பு போன்ற உயிரினங்களை விரட்டும் பணிகளையும் செய்து வருகின்றனர்.