அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர்; பாலத்தில் இருந்து கீழே விழுந்து 2 இளைஞர்கள் மரணம்.. அதிர்ச்சி காட்சிகள் உள்ளே.!



Andhra Pradesh Visakhapatnam NYD Bridge 2 Youngsters Died in Accident 

 

ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் நகரில், என்ஏடி மேம்பாலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் நேற்று இரவு ஒரு பயங்கர விபத்து நடைபெற்றது. சாலையில் அதிவேகத்தில் வருகை தந்த இருசக்கர வாகனத்தில் 3 இளைஞர்கள் பயணம் செய்த நிலையில், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் பக்கவாட்டில் மோதி இருக்கிறது. 

கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால் சோகம்

இதனால் வாகனத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்களில் 2 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், உயிரிழந்த இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதையும் படிங்க: பாலியல் தொல்லையால் அதிர்ச்சி; கடிதம் எழுதிவைத்து கல்லூரி மாணவி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை.!

காவல்துறை விசாரணை & காட்சிகள் வைரல்

விசாரணையில் விசாகப்பட்டினம் ஆரவல்லி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தனவரவு குமார் மற்றும் பவுன்குமார் ஆகியோர் இறந்தது முதற்கட்டமாக தெரியவந்தது. இவர்கள் ஒருசேர இருசக்கர வாகனத்தில் பயணித்த நிலையில், மேம்பாலத்தில் அதிவேகத்தில் வந்தபோது வாகனத்தை திருப்பத்தில் கட்டுப்படுத்த இயலாமல் விபத்து நடந்தது உறுதியானது. இதன் பதைபதைப்பு காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே தவறி விழுந்த மாணவி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்...!!