மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Accident: இறுதி ஊர்வலத்தில் எமன்போல பாய்ந்த கார்.. 18 பேருக்கு நடந்த சோகம்..!
உறவினரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட நபர்களின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 18 பேர் காயமடைந்தனர்.
பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தை சேர்ந்த நபர் உயிரிழந்துவிடவே, அவரின் உடலை அடக்கம் செய்ய இறுதிச்சடங்கு நடந்துள்ளது. உறவினர்கள் இறுதிச்சடங்கு ஊர்வலம் சென்றுள்ளனர்.
அந்த நேரத்தில், அவ்வழியே பயணித்த கார் அதிவேகத்தில் ஊர்வலத்திற்குள் புகுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஊர்வலத்தில் கலந்துகொண்ட பல உறவினர்கள் படுகாயமடைந்தனர்.
மொத்தமாக 18 பேர் படுகாயமடைந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், கார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கார் ஓட்டுநர் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.