மக்களே உஷார்! மீண்டும் அதிகரிக்கும் கள்ள நோட்டுக்கள்; ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி ரிப்போர்ட்



Black report from rbi

கருப்பு பணத்தை ஓழிப்பதே முக்கிய குறிக்கோள் என்று பரப்புரை செய்து 2015 ஆம் ஆண்டில் ஆட்சியை பிடித்தது பாஜகா. 

அதை செயல்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்தும் மோடி ஆட்சிக்கு எந்த பயனும் அளிக்கவில்லை என்பது தான் உண்மை.

Black money

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதாக கூறி கடந்த 2016ஆ-ம் ஆண்டு, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இதனால்  பொது மக்கள் பல இண்ணல்களுக்கு ஆளானது தான் மிச்சம். இதனால் கருப்பு மற்றும் கள்ள நோட்டுக்கள் குறைந்த பாடில்லை. 

இந்த நடவடிக்கைக்கு பின்னர் அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த 2,000, 500, 200, 50, 10 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் மூலம் வெளியிடப்பட்டன.

Black money

ஆனால் இந்த புதிய ரூபாய் நோட்டுகளும் கள்ளத்தனமாக தயாரித்து புழக்கத்தில் விடுவது தெரியவந்தது. இத்தகைய கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து இருப்பதை ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளில் அதிகாரிகளிடம் சிக்கிய கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை பற்றியும் கூறப்பட்டு உள்ளது.

இதில் கடந்த 201620-17ஆ-ம் ஆண்டில் வெறும் 199 புதிய 500 ரூபாய் கள்ளநோட்டுகள் சிக்கிய நிலையில், 2017-&2018 ஆ-ம் ஆண்டில் 9,892 நோட் டுகள் சிக்கி இருக்கின்றன. 2,000 ரூபாய் நோட்டுகளை பொறுத்தவரை 2016-&2017இ-ல் சிக்கிய கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 638 ஆக இருந்த நிலையில், கடந்த 2017--&2018-இல் 17,929 நோட்டுகள் பிடிபட்டுள்ளன.

இதைப்போல 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 35 சதவீத மும், 50 ரூபாய் கள்ள நோட் டுகள் 154 சதவீதமும் அதி கரித்து இருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.