மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அக்னிபத்: எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதிரடியாக அக்னி வீரர்கள் தேர்வை தொடங்கிய மத்திய அரசு..!
அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படை, கடற்படையில் சேர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய ராணுவ பணிக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி 4 ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையில், இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பீகார், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 9 மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படை, கடற்படையில் சேர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ராணுவத்தில் 4 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் அக்னி வீரர்களாக பணியாற்ற, பதினேழரை (17-1/2) வயது முதல் இருபத்தியோரு (21) வயது வரையுள்ள இளைஞர்கள் ஜூன் 24 ஆம் தேதி (இன்று) முதல் விண்ணப்பிக்கலாம் என முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பின்படி, விமானப்படை (Indian Air Force) மற்றும் கடற்படையில் (Indian Navy) பணியாற்ற விருப்பம் உள்ள இளைஞர்கள், இன்று முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று காலை 10 மணி முதல் விமானப்படை இணையதளத்தில் பதிவு செய்யலாம். அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கு ஜூலை 5 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல் 2005 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்கள் அக்னி வீரர்களாகும் தகுதி படைத்தவர்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.