மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படுகிறது.? மத்திய அமைச்சா் விளக்கம்.
கொரோனா காரணமாக மூட பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது பற்றி விளக்கமளித்துள்ளார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட, காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் கூறுகையில், தற்போது உள்ள சூழ்நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவெடுப்பது சிரமம். ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகு கொரோனா சூழலை ஆய்வு செய்த பின், உரிய முடிவு எடுக்கப்படும்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனே அரசுக்கு முக்கியம். ஒருவேளை ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் பள்ளி, கல்லூரிகளை மூடவேண்டிய நிலை வந்தால் அதனால் கல்வி ரீதியில் மாணவர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாமல் இருக்க மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உறுதி செய்யும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.