மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் எப்போது துவங்குகிறது.? மத்திய கல்வித் துறை அமைச்சர் தகவல்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் தற்போது வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வருவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கொரோனா பேரிடர் காலத்தில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை நடைபெறும் என்றும் 2வது பருவத்திற்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி முதல் தொடங்கும் என்றும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.