திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
டீசல் ஊற்றி பரோட்டா செய்யும் காட்சிகள்!! இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..
தாபா ஒன்றில் டீசல் ஊற்றி பரோட்டா செய்யப்படும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
டீசல் பரோட்டா
சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் அந்த வீடியோவில், கடைக்காரர் பரோட்டாவை டீசல் எரிபொருளில் கொண்டு dip-fry செய்கின்றார். அந்த சமையல்காரர் ஒரு கருமையான திரவத்தில் பரோட்டாவை முக்குகிறார், அதை படம் பிடிக்கிறவர் அது டீசல் என்று கூறுகின்றார். படம் பிடிப்பவர் கூட அதன் சுவை "கச்சோரி" போன்று இருப்பதாகக் கூறுகின்றார்.
சமூகவலைத்தளங்களில் கண்டனம்
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கர வைராலானதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். மேலும், இந்திய உணவு கட்டுப்பாட்டு வாரியத்தை டாக் செய்து, இந்த வீடியோ குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தனக்குத்தானே போட்டி; கெத்து காட்ட நினைத்து விலா எலும்பில் வசமாக வாங்கிய பிலிப்ஸ்.! கதறலோ கதறல்.!
டீசல் பரோட்டாவின் பின்னணி
இதனை அடுத்து நடந்த விசாரணையில், தாபாவின் உரிமையாளர் சன்னி சிங் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். சிங் கூறியதாவது, "எங்கள் தாபாவில் 'டீசல் பரந்தா' போல எதையும் நாங்கள் செய்வதில்லை என்றும், ஒரு பிளாகர் அந்த வீடியோவை பொழுதுபோக்குக்காக எடுத்ததாகவும், டீசலில் பொரித்த பரந்தா யாரும் சாப்பிட மாட்டார்கள் என்பது பொதுவான அறிவு.
வீடியோ வைரலாகியது எனக்கு தெரியாது, நான் நேற்று தான் இதுகுறித்து அறிந்தேன். அந்த பிளாகர் தற்போது அந்த வீடியோவை நீக்கி மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
Diesel wala paratha... seriously? This is a dhaba in Chandigarh using diesel to fry parathas.
— Sahil Sinha (@iSahilSinha) May 13, 2024
The 'MasterChef' should be arrested immediately and so should be his customers.
Doom is coming! pic.twitter.com/y8sO3BU6hj
இதையும் படிங்க: நூலிழையில் உயிர்தப்பிய அமித் ஷா; கட்டுப்பாட்டை இழந்து பதறவைத்த ஹெலிகாப்டர்..! அதிர்ச்சி காட்சிகள்.!