மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய வரலாற்றில் முதன் முறையாக : லஞ்சம் வாங்கிய வழக்கில் டி.எஸ்.பி கான்ஸ்டபிளாக பதவியிறக்கம்..!
உத்தர பிரதேச மாநிலம், 2021 ஆம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக டி.எஸ்.பி ஒருவரை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தா மருத்துவமனையின் உரிமையாளர் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் ராம்வீர் யாதவ் ஆகிய இருவரும் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்தார். இந்த வழக்கை அப்போது டி.எஸ்.பி.யாக இருந்த வித்யா கிஷோர் சர்மா விசாரணை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தனது புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த பெண் குற்றஞ்சாட்டினார். மேலும் இந்த வழக்கில், குற்றவாளிகளான இருவரிடம் இருந்து காவல்தூறையினர் லஞ்சம் பெற்றதாகவும் குற்றஞ்சாட்டினார். இதனை தொடர்ந்து, காவல்துறை அதிகாரியான ராம்வீர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடந்த தீவிர விசாரணையில், இந்த வழக்கில் டி.எஸ்.பி சர்மா குற்றவாளிகளிடம் இருந்து ரூ.5 லட்சம் வரை லஞ்சம் வாங்கிய வீடியோ அரசின் கவனத்திற்கு சென்றது. இதன் காரணமாக டி.எஸ்.பி பதவி வகித்த வித்யா கிஷோர் சர்மாவை கான்ஸ்டபிளாக பதவியிறக்கம் செய்யும்படி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.