"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
சந்தேகப்பட்ட காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த இளம்பெண்.!
கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியில் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போன் சர்வீஸ் சென்டரில் வேலை செய்து வந்துள்ளார். இவர் ரேணுகா என்ற பெண்ணுடன் லிவ் இன்னில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதில் ரேணுகாவிற்கு 6 வயது மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரேணுகாவின் மீது சந்தேகப்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த அதே போன்று சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ரேணுகா, தனது லிவ் இன் பார்ட்னரை கத்தியால் குத்தியுள்ளார். மேலும் ரத்த வெள்ளத்தில் கிடந்த காதலனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்துள்ளார்.
அதன் பின்னர் வீட்டிற்கு வந்த ரேணுகா உடைமைகளை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் அவரை வீட்டில் வைத்து பூட்டி வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் ரேணுகாவை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.