பாருங்க.. கண்களை மூடித் திறக்கும் ராமர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..



god-ramar-ai-viral-video

அயோத்தி ராமரின் சிலை கண்களை திறப்பது போன்றும், சிரிப்பது போன்றும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமஜென்ம பூமி ஆலயத்தில்  ராமரின் பிராண பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய பிரதமர் மோடி உட்பட அரசியல் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Ramar AI video

இந்நிலையில் அயோத்தி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள குழந்தை பருவத்தில் இருக்கும் ராமரின் சிலை கண்களை திறந்து சிரிப்பது போன்றும், தலையை திருப்புவது போன்றும் உள்ள வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு அச்சு அசல் உண்மை போன்றே இருக்கும் இந்த காட்சியானது வளர்ந்து வரும் AI தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ காட்சியாகும்.