சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த மூட்டைகள்; நடுவில் சிக்கிக்கொண்ட தொழிலாளிகள்.. பதறவைக்கும் வீடியோ.!



Goods Down Accident CCTV Video 

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உலர் தானியங்கள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய பிரம்மாண்ட அளவிலான கிட்டங்கிகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. பின் தேவையின் போது அவை விநியோகம் செய்யப்படுகிறது.

இவ்வாறான கிட்டங்கியில் பல இலட்சக்கணக்கான தானிய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். அப்பணியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருப்பர்.

இதையும் படிங்க: அடேய் குட்டி பையா.. இதெல்லாம் ரொம்ப ஓவர்.. பாம்புடன் தைரிய விளையாட்டு.!

இதனிடையே, கிட்டங்கி ஒன்றில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. நெல் கிட்டங்கி ஒன்றில் பணியாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போது, சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. 

இந்த சம்பவத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களில் இரண்டுக்கும் மேற்பட்டோர் மூடைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். ஒருவரின் உடலில் பாதி அளவு மூடை விழுந்தது. இவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டாலும், சம்பவம் எப்போது நடந்தது? என்ற விபரம் இல்லை. மேற்படி தகவல் விசாரிக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் ஆணுறுப்பு நறுக்... கணவன், சகோதரர்கள் பகீர் செயல்.!