மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமாகி ஒரு வருடம் கழித்து கணவனின் மொபைல் போனை பார்த்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
குஜராத் மாநிலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவர் மீது அதிர்ச்சியூட்டும் புகார் ஒன்றை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.
அதாவது அந்த இளம்பெண் நூலகம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே போல் நூலகம் ஒன்றில் பணிபுரியும் நபரை திருமணம் செய்துள்ளார். திருமணமாகி ஒரு வருடம் சந்தோசமாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கணவரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து அந்த இளம்பெண் கணவரின் மொபைல் போனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் கணவரின் மொபைல் போனில் பல ஆண்களுடன் தவறான உறவில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து கணவரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் திருமணத்திற்கு முன்பு இருந்தே அவர் ஆண்களிடம் மட்டுமே ஆர்வம் கொண்டு இருந்ததாகவும், சமுதாயம் ஏற்றுக் கொள்ள வேண்டி மட்டும் திருமணம் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வேலை செய்யும் பெண் ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் உன்னை திருமணம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதை அனைத்தையும் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் எப்படியாவது தனது கணவரை திருத்தி விடலாம் என நினைத்து பல முயற்சிகள் செய்தும் அவரை மாற்ற முடியவில்லை என்று கூறி புகார் கொடுத்துள்ளார்.