35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
மதியம் 12மணி முதல் காலை 6மணி வரை..இரு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் நாளொன்றுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். ஆந்திராவிலும் கொரோனா தொற்று பெருமளவில் பரவி வருகிறது.
இந்நிலையில் ஆந்திரா முழுவதும் வருகின்ற மே மாதம் 5ஆம் தேதி முதல் பிற்பகல் 12 மணியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஊரடங்கு 14 நாட்களுக்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த ஊரடங்கு நாட்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும் திறந்திருக்கும். அதன் பிறகு அத்தியாவசிய தேவைகள் உள்ள கடைகள் மற்றும் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.