"கண்டா வரச்சொல்லுங்க" - மதுரை எம்.பி வெங்கடேசனுக்கு எதிராக போஸ்டர்.. காரணம் என்ன?.! 



Madurai Peoples Poster about CPI Party MP Su Venkatesan Missing 

 

மதுரை பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் சு. வெங்கடேசன். இவர் திமுக கூட்டணி சார்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொகுதி பணிகள், தமிழை மத்திய அரசின் அலுவலகங்களில் இடம்பெற வாய்ப்பது என தொடர்ந்து களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். 

வண்டியூர் பகுதியில் போஸ்டர்

முன்னதாக எம்.பி வெங்கடேசனை காணவில்லை என மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்த பிரச்சனை பின் சமீபத்தில் தணிந்த நிலையில், தற்போது மீண்டும் அவரை காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. குறிப்பாக வண்டியூர் பகுதிகளில் திரும்பும் இடமெல்லாம் எம்.பி-ஐ காணவில்லை என போஸ்டர் இருக்கிறது. 

இதையும் படிங்க: பயங்கரம்... 3 லட்ச ரூபாய் பணத்திற்காக தந்தை படுகொலை.!! மகன் வெறி செயல்.!!

கண்டா வரச்சொல்லுங்கள்

வண்டியூர் பகுதியில் உள்ள பல இடங்களில் 'கண்டா வரச்சொல்லுங்க' என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், இரண்டாவது முறையாக வெற்றிபெறும், வண்டியூர் பகுதி மக்களுக்கு நன்றி கூட சொல்ல வராத எம்.பி-ஐ மக்கள் வாக்களித்து வெற்றிபெறச்செய்தும், அவர் செய்தது என்ன? என கேள்வி எழுப்பி இருக்கின்றனர். 

காரணம் என்ன?

இந்த சுவரொட்டி திமுக - கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே ஏற்பட்ட பனிப்போர் காரணமாக ஒட்டப்பட்டுள்ளது என்றும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அத்தகவல் உறுதி செய்யப்படவில்லை. பொதுமக்கள் இந்த விஷயம் குறித்து கூறுகையில், "எம்.பி வெங்கடேசன் மக்களிடம் நேரில் வந்து குறைகளை கேட்பது இல்லை. மதுரை, அதன் சுற்றுவட்டார தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். எம்.பி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என தெரிவிக்கின்றனர்.
 

இதையும் படிங்க: இன்று ஒரேநாளில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி.. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து சோகம்.. பருவமழை தொடங்கும் முன்னே பரிதாபம்.!