பேருந்துக்கு நடுவே சிக்கி அப்பளமாக நொறுங்கிய ஆட்டோ.. பிறந்தநாளை கொண்டாட காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!



in Karnataka Bangalore Bus Auto Crash 2 died 

 

இரண்டு வாகனத்திற்கு நடுவே சிக்கிய ஆட்டோவில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், கிரிநகர், கீதா சர்க்கிள், 80 அடி சாலையில், பெங்களூர் மாநகர பேருந்து ஒன்று ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இரண்டு பேருந்துகளுக்கு நடுவில் சிக்கிய பேருந்து, அப்பளம் போல நொறுங்கி பயங்கர விபத்து ஏற்பட்டு இருந்தது. 

இதையும் படிங்க: அப்பளமாக நொறுங்கிய கார்.. ஆன்மீக சுற்றுலாவில் நேர்ந்த சோகம்.. கார் - லாரி மோதி 5 பேர் பரிதாப மரணம்.!

சாலையின் முன்னால் சென்ற பேருந்து நின்ற நிலையில், அதற்கு பின்னால் ஆட்டோ வந்தது. ஆட்டோவுக்கு பின்னால் வேறொரு பேருந்து வந்தது. அது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோவின் மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த பயணி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 

accident

அப்பளமாக நொறுங்கிய ஆட்டோ

ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்தது ஆட்டோ ஓட்டுநர் அனில் குமார், பயணி மருத்துவர் விஷ்ணு பாபாத் (வயது 80) என்பது தெரியவந்தது. 

கே.பி அக்ராஹாரம் பகுதியில் வசித்து வரும் அனில் குமாருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மருத்துவர் தனது 80 வயது பிறந்தநாளை சனிக்கிழமை கொண்டாட இருந்தார். ஆனால், அதற்கு ஒருநாள் முன் வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் அவர் உயிரிழந்து இருக்கிறார். மருத்துவரின் மகன் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், அவர் பெங்களூர் வருகிறார். 

இதையும் படிங்க: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; இளைஞர்களின் அதிவேகத்தில் தம்பதி ஒருசேர விபத்தில் மரணம்.!