#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
தாயின் புற்றுநோய் பாதிப்பால் கவலை; 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை.!

கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம், வடக்கன்பரவூர், புத்தன்வேலிக்காரா, அஞ்சுவழி பகுதியில் வசித்து வருபவர் சுதாகரன். இவரின் மகன் அம்பாடி (வயது 16). இவர் அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார்.
சிறுவனின் தாயார் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். சம்பவத்தன்று எர்ணாகுளத்தில் இருக்கும் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளார். அவருடன் கணவரும் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: பெண்ணை காதலிப்பதாக நடித்து பலாத்காரம்; யூடியூபர் அதிரடி கைது.!
சிறுவன் மட்டும் வீட்டில் தனியே இருந்த நிலையில், சிகிச்சைக்கு பின்னர் தம்பதிகள் வீட்டிற்கு வந்தனர். அப்போது, வீடு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்தது.
சிறுவன் தற்கொலை
அப்போது சிறுவன் கதவை திறக்காத நிலையில், ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார். அச்சமயம், சிறுவன் அம்பாடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுவன் தாயின் உடல்நலம் குறித்து கவலைப்பட்டு வந்துள்ளார். தன்னால் அவர் விரக்தியில் முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: திருமணமான ஒரே மாதத்தில் தூக்கில் தொங்கிய சட்டக்கல்லூரி மாணவி.! கதறும் கணவன்.!