2 வயது மகனின் உயிரை காப்பாற்றிய தாய்; இரும்பு கேட் வீட்டில் இருப்போர் கவனம்.! பதறவைக்கும் சம்பவம்.!
கேரளா மாநிலத்தில் உள்ள கொடுங்கல்லூர், ஆழிக்கொடு, தோமா பில்க்ரிமேஜ் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் பீஜோய். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி கிரீஷமா இருக்கிறார். தம்பதிகளுக்கு 2 வயதுடைய கேன்ஸ் என்ற மகன் இருக்கிறார்.
சம்பவத்தன்று காலை நேரத்தில், தாயுடன் மகன் இருந்துள்ளார். வீட்டின் பிரதான கதவை கிரீஷிமா திறந்துகொண்டு இருந்தார். சிறுவன் தாயின் அருகே இருந்துள்ளார்.
தாங்கிப்பிடித்து மகனை காப்பாற்றிய தாய்
இரும்பு கதவை திறந்து வைத்துவிட்டு சில அடிகள் நகர்ந்தபோது, கேட் திடீரென சரியத் தொடங்கியுள்ளது. மகன் கதவுக்கு அருகே இருக்க, பதறிப்போன தாய், கதவை தாங்கிப்பிடித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: தேனிலவு முடித்த தம்பதிக்கு வழியில் காத்திருந்த எமன்; உறக்கத்தால் துள்ளத்துடிக்க பறிபோன 4 உயிர்.!
இதனால் மகன் மீது இரும்பு கேட் விழாமல் தப்பித்த நிலையில், அபயக்குரல் எழுப்பியதைத்தொடர்ந்து குடும்பத்தினர் விரைந்து வந்தனர். தாயின் சாதுர்ய செயலால் இருவரின் உயிர் தப்பியது நடந்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பான காணொளியும் வெளியாகியுள்ள நிலையில், இரும்பு கதவு வைத்திருப்போர் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தலைக்கு வந்தது துப்பட்டாவுடன் போனது - நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. பதறவைக்கும் காணொளி.!