வீடு-வீடாக ரேஷன் பொருட்கள் விநியோகம்; முதல்வர் உறுதி.!



in Pondicherry CM Rangasamy Statement 19 March 2025

புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கிய கூட்டத்தொடரில், கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் தங்களின் தொகுதிகள் மற்றும் மாநில திட்டங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Pondicherry

அரசும் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறது. இந்நிலையில், நெல்லித்தோப்பு சட்டப்பேரவை உறுப்பினர் ரிச்சர்ட், "மாநில அரசு கொடுக்கும் இலவச அரிசியை பெரும்பாலான மக்கள் வாங்கவில்லை" என கூறினார்.

இதையும் படிங்க: #Breaking: புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து இடத்திலும் தமிழ் மொழி கட்டாயம் - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.!

இதற்கு பதில் அளித்த அம்மாநில முதல்வர் ரங்கசாமி, 'புதுச்சேரி மாநில ரேஷன் அட்டைதாரர்களுக்கு, வீடு-வீடாக சென்று அரிசி வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வீடு-வீடாக சென்று வழங்கப்படும்' என கூறினார்.
 

இதையும் படிங்க: திடீரென குறுக்கே பாய்ந்த மாடு.. காரில் மோதி இளைஞர் துள்ளத்துடிக்க பலி..!