கொரோனா சமயத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள்! 14 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய இந்திய படை!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியதால், இந்தியா முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா சமயத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பயங்கரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதனால் காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு அவ்வப்போது பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், நவுசரா எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தானால் பயிற்சியளிக்கப்பட்ட 3 பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் எல்லையில் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளும் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Another terrorist killed in encounter at Saimoh area of Tral, Awantipora. Operation concludes. Incriminating materials including arms and ammunition recovered: Kashmir Zone Police https://t.co/o8JUa8G6Md
— ANI (@ANI) June 2, 2020
அதேபோல், மெந்தர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 10 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அவந்திபோரா பகுதியில் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், இந்திய எல்லை முழுவதும் பலத்த பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.