பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்துக்குள்ளானது... மருத்துவமனையில் அனுமதி..!!!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் சாலையின் நடுவே இருக்கும் டிவைடரில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் கார் சாலையின் நடுவே இருந்த டிவைடரில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூர்க்கி அருகே விபத்து நடந்ததாகவும், ரிஷப் பண்ட் காரை ஓட்டிச் சென்றதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் அவரின் நெற்றி மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் போலீஸ் சூப்பிரண்டு தேஹத் ஸ்வப்னா கிஷோர் சிங் சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய இந்திய அணியில் பண்ட் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.