சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
தித்திப்பு அறிவிப்பு.. இந்தியர்களின் ஆயுட்காலம் 8 ஆண்டுகாலம் அதிகரிப்பு; மருத்துவ ஆய்வில் தகவல்.!
லான்செட் மருத்துவ இதழின் சார்பில், சமீபத்தில் உலகளவில் மக்களின் ஆயுட்காலம் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில், கடந்த 1990 முதல் 2021 வரை மக்களுக்கு ஏற்பட்ட நோய், அதனால் உயிரிழந்தவர்களின் விபரம், நோய்க்கான மருந்துகள், அதனை அணுகி உயிர்பெற்றவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்படி, இந்தியாவில் கடந்த காலங்களில் ஏற்பட்டு இருந்த சுவாசநோய், பக்கவாதம், புற்றுநோய், மாரடைப்பு ஆகிய மரணங்கள் குறைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் மருத்துவத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக, மேற்கூறிய பல்வேறு பிரச்சனைகள் தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டு, அவை சரியாக சிகிச்சைகள் இன்று அளிக்கப்படுகின்றன.
இதனால் இந்தியர்களின் ஆயுட்காலம் என்பது சராசரியாக 8 ஆண்டுகள் அதிகரித்து இருக்கின்றன. மேலும், உலகளவில் மக்களின் சராசரி ஆயுட்காலம் 6.2 ஆண்டுகள் அதிகரித்து இருகின்றன.