காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
சிவப்பு எறும்பில், சட்னியா.?! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.!
இணையதளம் வாயிலாக பல நாடுகளில் மக்கள் வினோதமான உணவுகளை உண்பதை நாம் கண்டிருக்கிறோம். அப்படி ஒரு உணவு இந்தியாவிலும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்! இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், மயூர்பஞ்ச் என்ற மாவட்டத்தில் உள்ள மக்கள் தற்போது சிவப்பு எறும்புகளை பிடித்து அதன் முட்டைகளையும் சேர்த்து, சுத்தம் செய்த பின்பு அதில் இஞ்சி, பூண்டு, மிளகாய், உப்பு சேர்த்து சட்னியாக அரைத்து விரும்பி உண்கின்றனர். இதனை சிமிலிபல் காய் சட்னி என்று அழைக்கின்றனர்.
சிவப்பு வீவர் வகை எறும்புகள் எனப்படும் சிவப்பு நெசவாளர் எறும்புகள், மயூர்பஞ்ச் மாவட்டத்திலுள்ள மரங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இதில் அதிக அளவு மெக்னீசியம், வைட்டமின் பி12, பொட்டாசியம், புரதச்சத்து, கால்சியம், காப்பர், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் 18 வகையான அமினோ அமிலங்கள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இந்த சட்னி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, நோய்கள் அண்டாமலும் காக்கிறது என்று கூறுகின்றனர். மேலும் மன அழுத்தத்திற்கும், ஞாபக மறதிக்கும் மருந்தாக பயன்படுகிறது.
எனவே அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இதற்கு புவிசார் குறியீடு (GI Tag) வாங்குவதற்கு முயற்சித்து வந்தனர். அதன் பலனாக தற்போது இந்த சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பொருட்களின் புவியியல் குறியீடுகள் ஒரு பொருளின் தோற்ற இடத்தைக் குறிக்கின்றன. அது அந்த பொருளின் தனித்தன்மையையும், தரத்தின் உத்தரவாதத்தையும் குறிக்கிறது.
சிவப்பு எறும்பு சட்னிக்கு நாம் ஆச்சரியப்பட்டு கொண்டிருக்கையில், "இது என்ன பிரமாதம்!! இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு!!" என்கின்ற வகையில், கோவா, அசாம் போன்ற மாநிலங்களில் உள்ள மக்கள் தவளையின் காலை சூப்பாக செய்து குடித்து வருகின்றனர்.
இது வயிறு சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது என்று கருதுகின்றனர். மேலும் நம்முடைய தமிழகத்திலும் ஈசலை சமைத்து உண்பதை நாம் அறிந்திருக்கிறோம். இவ்வாறாக வெளிநாடுகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில், இந்திய உணவுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.