#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பகீர் சம்பவம்... "அவ எங்க இருக்கான்னு சொல்லு உயிரோட விட்டர்றேன்.." கள்ள காதலுக்காக தொழிலதிபர் கொலை.!!
சேலம் அருகே 40 வயது கள்ளக்காதலிக்காக தொழிலதிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலில் விழுந்த வெங்கடேஷ்
சேலம் மாவட்டம் பொம்மியம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ். 31 வயதான இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்காட்டிற்கு வேலைக்கு சென்ற இடத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தேன்நிலவு(40) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து வெங்கடேஷ் மற்றும் தேன் நிலவு ஆகியோர் கருப்பூரில் தனியாக வீடு எடுத்து தங்கி கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர்.
தொழிலதிபருடன் நெருக்கம் காட்டிய தேன்நிலவு
வெங்கடேஷ் மற்றும் தேன்நிலவு கருப்பம்பட்டியில் குடியேறிய போது பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தி வரும் சுபாஷ் சந்திர போஸ் என்ற நபருடன் தேன் நிலவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்ததை வெங்கடேஷ் வெறுத்திருக்கிறார். இது தொடர்பாக தேன் நிலவை பலமுறை எச்சரித்தும் அவர் சுபாஷ் சந்திரபோஸ் உடனான பழக்கத்தை விடுவதற்காக இல்லை. இதனைத் தொடர்ந்து தனது காதலி தேன் நிலவுடன் ஓமலூர் உள்ள அம்பேத்கர் நகருக்கு குடி பெயர்ந்திருக்கிறார் வெங்கடேஷ்.
இதையும் படிங்க: மதுரை அருகே பயங்கரம்... துள்ளத் துடிக்க கொலை செய்யப்பட்ட இரட்டையர்கள்.!!
தொடர்ந்த கள்ளக்காதல்
ஓமலூர் குடிப்பெயர்ந்த பின்னரும் தேன் நிலவு மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் இடையேயான கள்ளக்காதல் தொடர்ந்திருக்கிறது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். வெங்கடேசுக்கு இது தெரிய வரவே அவர் தனது காதலி தேன் நிலவை ஜூன் 25ஆம் தேதி அன்று கண்டித்து இருக்கிறார். இதன் பிறகு சிறிது நேரத்தில் தேன்நிலவு வீட்டிலிருந்து மாயமாகி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் தனது காதலியை சுபாஷ் சந்திரபோஸ் தான் மறைத்து வைத்திருப்பதாக நினைத்து அவர் மீது ஆத்திரமடைந்தார் .
தொழிலதிபரை தீர்த்து கட்டிய வெங்கடேஷ்
இதனைத் தொடர்ந்து தனது காதலியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தனது நண்பரான தினேஷ் என்பவரை அழைத்துக் கொண்டு அரிவாளுடன் சுபாஷ் சந்திர போஸின் பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு சென்று இருக்கிறார். அங்கு சென்று தனது காதலி தேன் நிலவை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என சுபாஷ் சந்திரபோஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் வெங்கடேஷ். சுபாஷ் சந்திர போஸ் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியதால் அவரை அரிவாளால் வெட்டிய வெங்கடேஷ், தினேஷுடன் அங்கிருந்து தப்பி சென்றார். மேலும் சுபாஷிடம் தனது காதலியை எங்கு மறைத்து வைத்திருக்கிறாய் என்று கூறிவிட்டால் மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைப்பதாகவும் கெஞ்சி இருக்கிறார். சுபாஷ் சந்திர போஸ் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதால் அவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கைது செய்த காவல்துறை
ரத்த வெள்ளத்தில் சரிந்த சுபாஷ் சந்திரபோஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் செல்போன் எண்களின் அடிப்படையில் துப்பு துலக்கி பதுங்கி இருந்த வெங்கடேஷ் மற்றும் தினேஷை காவல்துறை கைது செய்துள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலதிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: திருச்சியில் துயரம்... மதுவால் வந்த விரக்தி.!! கத்திரிக்கோலால் கழுத்தை அறுத்த முதியவர்.!!