மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எதிர்க்கட்சி தனது தகுதியை இழந்துவிட்டது - முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு..!
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில் எதிர்க்கட்சி கலந்துகொள்ளாதது கரும்புள்ளி என கர்நாடக முதல்வர் தெரிவித்தார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவை நேற்று கூடிய நிலையில், 5 ஆவது நாளாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்களின் தர்ணாவை தொடர்ந்து கொண்டு வருகின்றனர். அமளிக்கு இடையே கேள்வி நேரத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் போது, அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பதில் அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில் எதிர்க்கட்சி இல்லை. இது வரலாற்றில் முதல் முறையாக நடக்கிறது. இது நமது சட்டப்பேரவை வரலாற்றில் கரும்புள்ளி ஆகும். எதிர்க்கட்சியான காங்கிரஸ் பொறுப்பில்லாத வகையில் நடப்பது இதுவே முதல் முறை ஆகும். அவர்களின் பொறுப்பற்ற முறையால் எதிர்க்கட்சி தகுதியை இழந்துள்ளார்கள்.
விவாதத்தில் பங்கெடுத்து அரசின் குறைகள் மற்றும் தவறுகளை காங்கிரஸ் கட்டாயம் சுட்டிக்காண்பித்து இருக்க வேண்டும். 50 வருடம் கர்நாடகாவை ஆட்சி செய்த காங்கிரஸ் சுகாதாரத்துறையை புறக்கணித்தது. பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் தான் அவசர ஊர்தி உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கால் மக்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி அளவில் நிவாரணம் வழங்கப்பட்டது" என்று தெரிவித்தார்.